
தேசிய சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் 72ஆம் தேசிய சுதந்திர தின நிகழ்வு நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் அரச நிர்வாக மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போதே சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகளின்போது பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய ஒட்டு மொத்த நாட்டையும் உள்ளடக்கும் வகையில் தேசிய மரநடுகை திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
Leave a Reply