
பிரித்தானியாவை சேர்ந்த 16 வயது இஸ்லாமியா இளைஞர் தனக்கு வந்த இனவெறி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு, தனக்கு பயமாக இருப்பதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இருக்கும் Leyton-ல் வசித்து வருபவர் Hasan Patel. 16 வயதான இவர் இஸ்லாமியார் எனவும் போராளி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இவரை சமூகவலைத்தளமான டுவிட்டரில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர்.
இதையடுத்து இவர் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், போரிஸ் ஜான்சனின் முகத்தை Ku Klux Klan-வுடன் சித்தரித்து, அதில் இவரின் உடல் எரிப்பது போன்று இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இது கண்டுகொள்ள தேவையில்லை என்று எனக்கு தெரிகிறது, இருப்பினும் எனக்கு 16 வயது என்பதால் பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி இன்னும் இது போன்ற 3 ஸ்கிரீன் ஷாட்டுகளை பகிர்ந்துள்ளார்.
கடந்த வாரம் இதே போன்று வந்த இனவெறி தொடர்பாக அனுப்பிய நபரின் உண்மை முகத்தை Hasan Patel சமூகவலைத்தள பக்கத்தில் அம்பலப்படுத்தியதால், அந்த நபர் தற்போது வேலையை இழந்துவிட்டதாகவும், இதனால் அந்த பதிவேற்றத்தை நீக்கும்படியும் இவரிடம் கூறியுள்ளார்.
மேலும் Hasan Patel இதற்கு முடிவு கட்டும் வகையில் சட்டப்பூர்வமாக இறங்க முடிவு செய்துள்ளார்.
ஏனெனில் என்னுடைய வயது மற்றும் படிப்பு காரணமாகவும், அதுமட்டுமின்றி இதை இப்படியே விட்டுவிட்டால் அவர்கள் செய்வது சரி என்பது போல் ஆகிவிடும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
Leave a Reply