
எல்ல பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
வெல்லவாய பகுதியிலிருந்து எல்ல நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் கரந்தகொல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
சாரதிக்கு முச்சக்கர வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வித்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பேரில் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் படுகாயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதோடு விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply