
இந்தியாவில் கல்லூரி நண்பனை பெண்ணாக மாறவைத்து திருமணம் செய்து பின்னர் ஏமாற்றியதாக இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவருக்கு அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது உடன் படித்த அபிஷேக் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளில் இருவரும் நெருங்கிய நண்பர்களான நிலையில், கல்லூரி முடிந்ததும் அவர்கள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அபிஷேக்கின் நடை, உடை, பாவனைகள் பெண் சாயலில் இருந்ததால், நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழலாம் என்று சந்தோஷ், அபிஷேக்கை வற்புறுத்தியுள்ளார். முதலில் தன் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறி அதற்கு மறுத்த அபிஷேக் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன் பிறகு சில நாட்களில் திடீரென, நீ அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையாக பெண்ணாக மாற வேண்டும் என அபிஷேக்கை சந்தோஷ் மீண்டும் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதனால் வேறு வழியின்றி பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய அபிஷேக் தனது பெயரை அர்ச்சனா என மாற்றி வைத்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு தனி வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில் சந்தோஷ், அர்ச்சனாவை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவருடன் வாழ மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தன்னை பெண்ணாக மாறச் செய்து, திருமணம் செய்துகொண்டு சந்தோஷ் ஏமாற்றிவிட்டதாக திருநங்கைகள் நலச்சங்கத்திலும், பொலிசாரிடமும் அவர் புகார் அளித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அபிஷேக்கின் மனதையும், உடலையும் மாற்றிய சந்தோஷ் ஏன் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Leave a Reply