இலங்கை அணியின் முன்னணி வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சமரா கப்புகெதர.

இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ரன்களும், 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1624 ரன்களும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 703 ரன்களும் எடுத்துள்ளார்.

சமரா கடைசியாக 2017ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச அணிக்காக விளையாடினார். ஒரு சமயம் இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே இடத்துக்கு சரியான வீரர் என அவர் விமர்சகர்களால் புகழப்பட்டார்,

ஆனால் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தாததால் அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவர் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இலங்கையின் பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் தெரிவித்துள்ளார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *