
கனடாவின் மேற்கு கடற்கரையில் போர்ட் ஹார்டி அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று உள்ளுர் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் படி, கனடாவின் கடற்கரையில் 6.3 அளவைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள போர்ட் ஹார்டிக்கு 177 கி.மீ தூரத்திலும், நாட்டின் மேற்கு கடற்கரையில் வான்கூவரிலிருந்து 500 கி.மீ வடக்கே இந்த நடுக்கம் ஏற்பட்டது.
உள்ளுர் நேரப்படி இரவு 7.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் ஒன்று முதல் ஐந்து கிலோமீட்டர் வரை பதிவு செய்யப்பட்டது.
பூகம்பத்தினால் ஏற்பட்ட சேதம் அல்லது காயங்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் இல்லை.
போர்ட் ஹார்டி மாவட்டம் வான்கூவர் தீவின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது. டிசம்பர் 23 அன்று முதல் வான்கூவர் தீவின் வடகிழக்கு முனையில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
முதல் நிலநடுக்கம் 5.1, இரண்டாவது 5.6 மற்றும் மூன்றாவது 5.8 என கனடா மையம் தெரிவித்துள்ளது.
Leave a Reply