குடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்டத்தை தூண்டும் வகையில் 16,000 க்கும் அதிகமான பதிவுகள்

உ.பி. யில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த 16,000 க்கும் அதிகமான பதிவுகளை பொலிஸார் நீக்கியுள்ளனர்.

போராட்டத்தை தூண்டும் வகையிலும் கண்டனத்திற்குரிய வகையிலும் ருவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 16,761 பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்து அதனை நீக்கியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக ருவிட்டரில் 7513 பதிவுகளும் பேஸ்புக்கில் 976 பதிவுகளும் யூடியூப்பில் 171 பதிவுகளும் பதிவிடப்பட்டுள்ளன.

இத்தகைய பதிவுகளை பதிவிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 பேருக்கு இது தொடர்பாக விசாரணைக்கு முன்னிலையாக அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வெடித்த கலவரத்தில் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் பலர் போலியான பேஸ்புக் கணக்குகள் மூலம் வன்முறையை தூண்டியதும் தெரியவந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தவறாக பதிவிடப்பட்ட தகவல்களையும் பொலிஸார் நீக்கியுள்ளனர். வதந்திகளை பரப்பிய சில பேஸ்புக் மற்றும் ருவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *