
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள தொழிற்கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் நுழைவதாக ஷெபீல்ட் நகர மேயர் டான் ஜார்விஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி 1935 ஆம் ஆண்டிலிருந்து மிக மோசமான தேர்தல் முடிவை சந்தித்தது.
அதன் 2017 தேர்தலின் பின்னர் வென்றிருந்த 59 இடங்களை இழந்ததைத் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஜெரமி கோர்பின் அறிவித்தார். அதன்படி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவர் கட்சியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கட்சியின் எதிர்காலத்தில் என் பங்கையம் இணைக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்லிங்ரன் சவுத் மற்றும் ஃபின்ஸ்பரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான எமிலி தோர்ன்பெர்ரி மற்றும் கிளைவ் லூயிஸ் இருவரும் அதிகாரப்பூர்வமாக தலைமைப் போட்டியில் நுழைவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் தொழிற்கட்சியின் சிரேஸ்ர பிரமுகர்களில் ஒருவரான சேர் கியர் ஸ்ரார்மெர், விகன் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லிசா நன்டி மற்றும் வேலை மற்றும் ஓய்வூதிய முன்னாள் அமைச்சர் யெவெற் கூப்பர் ஆகியோரும் தொழிற்கட்சி தலைமைப் போட்டியில் இணைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply