
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 22 வயது பெண்ணிற்கு அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவருக்கு மூக்கில் வலி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருந்துள்ளது.
இவர் சிறுவயதில் இருக்கும் போதே இந்த பிரச்சனை இருந்துள்ளது. பெற்றோரிடம் மூக்கு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை, இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான சிரமங்களை சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இறுதியாக மூக்கின் உள்ளே என்ன தான் இருக்கிறது என்பதை அறிவதற்காக மீண்டும் சிகிச்சைக்காகPattom-ல் இருக்கும் SUT BR Life மருத்துவனைக்கு சென்ற போது ஸ்கேன் எடுக்கும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கல் மூக்கின் உள்ளே ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்த போது உள்ளே பிளாஸ்டி சட்டை பட்டன் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.
இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவர் அம்மு ஸ்ரீபார்வதி கூறுகையில், மூக்கின் உள்ளே இருக்கும் சதை வளர்ந்துள்ளதால், இந்த பட்டன் வரும் காற்றை மறைத்துள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம், வலி இருந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் இளம் பெண்ணின் குடும்பத்தினர், இது எப்படி அவளின் மூக்கிற்குள் சென்றது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அப்பெண் கடந்த 10 ஆண்டுகளாக வலியால் தவித்து வந்தேன், இப்போது தான் அந்த பிரச்சனை தீர்ந்துள்ளது நன்றி என்று மருத்துவர்களிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply