
சவுதிஅரேபியாவில் வனவிலங்கு பூங்காவில், புலி இருந்த கூண்டினுள் விழுந்த நபரை புலி கடித்த நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் இருக்கும் Riyadh பூங்காவில் சூடானை சேர்ந்த Mohammed Abdul Mohsen என்ற 24 வயது நபர் பெங்காலி புலிகள் இருக்கும் கூண்டிற்குள் திடீரென்று விழுந்தார்.
இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டதால், ஊழியரக்ள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் உள்ளே இருந்த புலி அவரை தாக்கியது.
நிலைகுலைந்து போன அவர், புலியிடமிருந்து தப்புவதற்காக கதறினார், உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் துப்பாக்கி சத்ததின் மூலம் புலி விரட்டப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அந்த நபர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் கழுத்து மற்றும் கால் பகுதியில் புலி கடித்துள்ளதால், காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply