
அமெரிக்காவில் வெள்ளை தாடியுடன் மர்ம நபர் ஒருவர் மெர்ரி கிறிஸ்துமஸ் எனக்கூச்சலிட்ட படி சாலையில் பணத்தை வாரியிறைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்செயலில் ஈடுபட்ட 65 வயதான டேவிட் ஆலிவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராகக் காத்திருக்குமு் டேவிட் கிறிஸ்துமஸ் தினத்தை சிறையில் கழிப்பார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறையினர் கூறியதாவது, திங்கள்கிழமை பிற்பகல் தேஜோன் தெருவில் உள்ள அகாடமி வங்கியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது.
இருப்பினும், அவரிடம் உண்மையில் ஆயுதம் ஏதும் இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.
வங்கியிலிருந்து பணத்தை கொள்ளையடித்த பின்னர், டேவில் அதை ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று கூச்சலிட்ட படி சாலையில் வினோதமாக வீசி சென்றுள்ளார்.
ஆலிவரின் புகைப்படத்தை பொலிசார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர், வங்கி கொள்ளையத் தொடர்ந்து டேவிட் எல் பாசோ கவுண்டி குற்றவியல் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பணத்தை எடுத்துக்கொண்டு வழிப்போக்கர்கள் மீண்டும் வங்கிக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. வங்கியிலிருந்து டேவிட் எவ்வளவு பணம் கொள்ளையடித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகவில்லை.
Leave a Reply