யாழில் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

குறித்த மரத்தை அமைப்பதற்கு இரும்பு குழாய்கள்,வைக்கோல் மற்றும் 1100 தண்ணீர் பிலாஸ்டிக் போத்தல் என்பவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்தை அமைப்பதற்கு 15 பேர் கொண்ட குழுவால் 10 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன். கடந்த நான்கு வருடங்களாக அமைக்கப்பட்டுவரும் கிறிஸ்மஸ் மரத்தில் இந்த வருடம் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரமே உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *