
வட கொரியாவின் “கிறிஸ்மஸ் பரிசு” பற்றிய எச்சரிக்கையை சமாளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
மார்-எ-லாகோ விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆச்சரியம் என்ன என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம், அதை நாங்கள் வெற்றிகரமாக சமாளிப்போம். அத்தோடு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
சிலவேளைகளில் இது ஒரு நல்ல பரிசாக கூட இருக்கலாம், ஒரு ஏவுகணை சோதனைக்கு மாறாக அவர் எனக்கு ஒரு அழகான குவளை அனுப்பும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிங்கப்பூரில் ட்ரம்ப் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையே கடந்த ஆண்டு உச்சிமாநாட்டின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை விரைவில் செயற்படுத்த “உறுதியான நடவடிக்கைகளை” எடுக்குமாறு வொஷிங்டனை சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர், “ஒரு நிரந்தர சமாதான ஆட்சியை நிறுவுவதற்கும் கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுசக்தி மயமாக்கலை உணர்ந்து கொள்வதற்கும் சாத்தியமான ஒரு உறவுப்பாலத்தை உருவாக்க வட கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
Leave a Reply