
2015ஆம் ஆண்டிற்கு முன்னர் வெள்ளை வான் கலாச்சாரம் தீவிரம் அடைந்திருந்ததை தான் நன்கு அறிந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெள்ளை வான் கடத்தலுக்கு முகம் கொடுத்த நபர்கள், முகம் கொடுத்த முறை, வெள்ளை வேன் கடத்தல் முன்னெடுக்கப்பட்ட முறை தொடர்பிலான தகவல்கள் தன்னிடம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
வெள்ளை வான் கலாச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வுள்ள தான் அதன் விளைவுகள் குறித்து நன்கு அறிவதாக பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெள்ளை வான் சாரதிகள் இருவருடன் ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்ட விடயங்களை தொடர்பில் அறிந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அது தொடர்பில் தனக்கு கருத்து வெளியிட முடியாதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply