
பாக்கிஸ்தானை சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள் அயோத்தியில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி உத்தரபிரதேசத்தின் கோரக்பூர், அயோத்தி ஆகிய நகரங்களில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் முகமது யாகூப், அபுஹம்சா, முகமது ஷாவாஸ், நிசார் அகமது, முகமது சவுத்ரி என 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த 7 பேரும் இதுவரை பாதுகாப்பு படையினரிடம் சிக்காததால் அவர்களைப் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்திய படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதி வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாது என்பதால் நேரடியாக எல்லையை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர் எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை அயோத்தியில் நான்கு மாதங்களுக்குள் பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் தாக்குதல் நடத்துமாறு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பயங்கரவாதிகளுக்கு காணொலி மூலம் அழைப்பு விடுத்துள்ளது. குறித்த காணொலி தற்போது உளவுத்துறையினரிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply