
மலையகத்திலும் சூரிய கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை 09.35 மணியளவில் ஹட்டன் நகரம் உட்பட பல பகுதிகள் சற்று இருள் சூழ்ந்த நிலையில் காணப்பட்டது.
இச்சந்தர்ப்பத்திலேயே சூரியனின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதாக பார்வையிட்ட மக்கள் தெரிவித்தனர்.
சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் தென்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பிலும் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply