
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின், லிந்துலை பெயார்வெல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியுடன், நுவரெலியாவிலிருந்து பாணந்துறை நோக்கி சென்ற கார் மோதியபோது, மடுல்சீமையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, குறித்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரில் சென்ற மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காரை செலுத்தி சென்ற பெண் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சாரதி பாணந்துறை வைத்தியசாலையின் வைத்தியர் எனவும், அவரது இரு பிள்ளைகளுடன் நுவரெலியாவிற்கு சென்று மீண்டும் திரும்புகையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Leave a Reply