
மொறட்டுவ பகுதியில் உள்ள பிரபல பாடசாலை அதிபரை ஜனாதிபதியின் ஆலோசகர் என தெரிவித்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிபர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் தொடர்பாக தகவல் வௌியாகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த தினங்களில் பல சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றும் அல்லது அச்சுறுத்தும் நபர்கள் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply