
தளபதி விஜயின் குஷி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்த நடிகர் ஷாம், ’12B’ படத்தின் மூலமாக திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘உள்ளம் கேட்குமே’, ‘இயற்கை’, ‘லேசா லேசா’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், ”கிட்ஸ் சென்ட்ரல் என்ற பள்ளியில் தான் எனது மகள்கள் படிக்கிறாங்க . தல அஜித் சார அங்க தான் சந்திக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். அஜித் சாரோட பொண்ணு அங்க தான் படிக்கிறாங்க.
அங்க மட்டும் தான் அவர பார்க்க முடியும். அப்போ கேட்பாரு என்ன ஃபிட்டா இருக்கீங்க, அதுக்கு, சைக்கிளிங்லாம் பண்ணிட்டு இருக்கேன் சார்னு சொல்வேன். ஜாலியா பேசுவாரு” எனக்கூறியுள்ளார்.
Leave a Reply