
வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலாப்பயணிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே புகையிரத பயனச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன.
அந்தவகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அடுத்த மாதம் சிறப்பு கவுண்டர் அமைக்கப்படும் என்று ரயில்வே இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் சேவையை வழங்கும் சிலர், மொத்த அளவில் பயனச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு அதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையிலேயே குறித்த முடிவு எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறை மூலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அமைச்சர், விமான நிலையத்திலேயே அவர்களுக்கான பயன்சேட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்
Leave a Reply