
ஐக்கிய தேசியக் கட்சி அரசில் நியமனம் பெற்ற சுமார் 1000க்கும் அதிகமான அரச ஊழியர்களின் தொழில் வாய்ப்பு பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது செய்யப்பட்டு, ராஜித மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அரசியல் பழிவாங்கல்களை இவ்வரசு தொடர்ந்து வருவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி மரட்டும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலை தொடருமானால், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து அரசமைக்கும் அதிகாரத்தைக் கைப்பற்ற நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நல்லாட்சி என்ற பெயரில் மக்களிடம் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுபறிக்குள்ளாக்கப்பட்டிருந்த அதேவேளை கோட்டா அரசு அதிரடியாக கைது நடவடிக்கைகளையும், நிர்வாக ரீதியான கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்து வருவது பெரமுன ஆதரவாளர்களை திருப்திப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply