
வவுனியா உரியங்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் திடீர் என சற்று முன்னர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உரியங்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 41 வயதுடைய சுப்பிரமணியம் நவநீதன் என்பவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தந்தையும், மகனும் இவ்வாறு மீன் பிடிக்கச் சென்றதாகவும் அதன்போது நீரில் இறங்கிய தந்தை திடீர் என தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மீன்பிடி குளத்தில் முதலைகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் தலைமறைவாகியுள்ள நபரை முதலை இழுத்து சென்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
Leave a Reply