யாழ்.அச்சுவேலியில் கணவனை அச்சுறுத்த நடத்திய நாடகம் மரணத்தில் முடிந்தது..!

கணவன் பயப்படவேண்டும் என்பதற்காக தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீ மூட்டப்போவதாக கூறிக்கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக தீ பற்றிக் கொண்டத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயிாிழந்துள்ளாா். 

உயிரிழந்தவர் அச்சுவேலி தெற்கு பகுதியினை சேர்ந்த கசீபன் கீர்த்தனா வயது(29) என தெரிவிக்கப்பட்டது. திருமணம் செய்து ஜந்து வருடங்கள். இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தினந்தோறும் சண்டை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 18 ம்திகதி மேற்படி பெண் கணவனை பயப்படுத்துவதற்காக தற்கொலை செய்வேன் என கூறி தனக்கு தானே மண்ணெண்ணையினை ஊற்றி தீக்குச்சியினை பற்ற வைத்துள்ளார்.

இதன் போது தீ உடல் முழுவதும் பற்றியுள்ளது. உடனடியாக தீயினை அணைத்த கணவன் மனைவியினை காப்பாற்றி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இறப்பு விசாரணைகளை யாழ் .போதனா வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *