
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெழும்தெனிய நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
எனினும் இதுவரையில் அவரை கைது செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள், ராஜிதவின் கொழும்பு வீட்டிற்கும் பேருவளை வீட்டிற்கும் நேற்று சென்ற போதிலும் அவர் அங்கிருக்கவில்லை.
இதனால் அவரை கைது செய்வதற்கு இன்னமும் முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ், அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply