வயல் வௌியில் இருந்து 6 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், நாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள வயலில் இருந்து 6 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா பொதியின் நிறை 6 கிலோ 540 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கேரள கஞ்சா 1 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *