
களுபோவிலை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் 6ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
வெள்ளவத்தை விஜேரத்னபுர பிரதேசத்தைச் சேர்ந்த முனியாண்டி சத்திராஜூ என்ற 48 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களுக்காக சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 27ஆவது விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவம் நடந்த உடன் வைத்தியசாலை ஊழியர் நோயாளியை விடுதியில் அனுமதித்துள்ளார். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
மரணத்திற்கு பின்னரான பிரேதப் பரிசோதனைகளை களுபோவிலை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பாரிந்த கொட்டுகொட இன்று மேற்கொள்ள உள்ளார்.
இந்த நோயாளி 6ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்பதை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கெஹூவளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply