6 குழந்தைகளின் கண்முன்னே மனைவியை குத்திக்கொன்ற கணவன்

கிறிஸ்துமஸ் தினத்தன்று தன்னுடைய குழந்தைகளின் கண்முன்னே மனைவியை குத்திக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Olney பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது, 35 வயதுள்ள பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டிற்குள் நுழைந்த போது, பாதிக்கப்பட்ட பெண் கத்திக்குத்து காயங்களுடன் நினைவில்லாமல் கிடந்தார். 41 வயதுடைய அவருடைய கணவர் கையில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்தார்.

இந்த சம்பவமானது தம்பதியினரின் 6 குழந்தைகளின் கண்முன்னே நடந்துள்ளது. இதில் 14 வயது சிறுவனின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது நல்ல நிலையில் உள்ளான் எனக்கூறியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக, தம்பதியினரின் குழந்தைகளிடம் நேர்காணல் நடத்தி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *