
விவசாய அமைப்புகளுக்கு களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த முடியும் என விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை குறைக்கும் குறுகிய கால நடவடிக்கையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக பாரிய அளவிலான அரிசி உரிமையாளர்களிடம் உள்ள அரிசியை கொள்வனவு செய்து சந்தைக்கு விநியோகிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளயுகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply