இரத்தக் கறையும் காயங்களும் இல்லை: பிரபல மொடல் மரணத்தில் விலகாத மர்மம்

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் பிரபல மொடலுமான ஜாகி ஜான் மரணத்தில் வேறு நபர்களின் தொடர்பு உள்ளனவா என பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

குடும்ப நண்பரும் பொதுமக்களும் அளித்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 23 ஆம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஹில் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஜாகி ஜானின் குடியிருப்புக்கு சென்ற பொலிசார்,

பூட்டிய கேட்டின் உள்ளே ஜாகியின் தாயார் எந்த சலனமும் இன்றி நின்றிருப்பதை கண்டுள்ளனர். அந்த குடியிருப்பின் முன் வாசலும், பின் வாசலும் திறந்த நிலையில் இருந்துள்ளது.

குடியிருப்புக்குள் சென்ற பொலிசார், சமையலறையில் மரணமடைந்த நிலையில் கிடந்த ஜாகியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், சமையலுக்கு தயாராக காய்கறிகள் நறுக்கிய நிலையில் இருந்துள்ளது. சமையலறையில் ஜாகி தடுக்கி விழுந்ததில், தலையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயமே மரண காரணமாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ரத்தக் கறையோ காயங்களோ அவரது உடலில் காணப்படவில்லை. 45 வயதான ஜாகி சமையலறையில் தடுக்கி விழுந்தாரா அல்லது இரண்டாவது நபர் அவரை தள்ளிவிட்டாரா என்பது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *