
ஸ்பெயின் பள்ளி ஆசிரியை ஒருவர் உடலில் மனித உட்புற உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து கொண்டு மாணவர்களுக்கு மனித உடல் உறுப்புகள் குறித்த பாடம் நடத்தியுள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து, நியூயோர்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “வெரோனிகா டியூக் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக உள்ளார். தற்போது 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை, சமூக ஆய்வுகள் மற்றும் ஸ்பானிஷ் போன்ற பல்வேறு பாடங்களைக் கற்பித்து வருகிறார்.
43 வயதான ஆசிரியை, உயிரியலை வேடிக்கையாகவும் எளிதாகவும் கற்றுக்கொள்வதற்கு மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையுடன் வந்து பாடம் நடத்தியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குறித்த ஆசிரியை கூறகையில், “இந்த இளம் குழந்தைகளுக்கு உள் உறுப்புகளின் தன்மையைக் காண்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த நான், இதை முயற்சித்துப் பார்ப்பது சிறந்தது என்று நினைத்தேன்” என்றார்.
ஆசிரியை வெரோனிகாவின் கணவர் தனது மனைவியின் வகுப்பிற்குச் சென்று, உடற்கூறியல் விளக்க படங்கள் அடங்கிய உடையுடன் ஆசிரியையின் புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர், அந்த படங்களை ருவிற்றரில் வெளியிட்டார். இதற்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறு ருவீற் மற்றும் 66,000 லைக்குகளுடன் அந்த செய்தி பரவி வருகின்றது.


Leave a Reply