
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் 145 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து குறித்த பிரதேசங்களில் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெற கூடாது என்பதற்காக இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டன. அத்துடன் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளமையால் தற்போது இணையத்தள சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் தவறான முறையில் குறித்த சேவைகளை பயன்படுத்த கூடாது என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply