
பள்ளியில் ஊனமுற்ற சிறுவன் ஒருவன் கால் முட்டியினால் தவிழ்ந்து ஓட்டங்கள் சேர்க்கும் வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சமூகவலைதளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பள்ளி சிறுவர்களை சிலர் இணைந்து கிரிகெட் விளையாடுகின்றனர். அதில் ஊனமுற்ற சிறுவன் ஓட்டங்கள் சேர்க்க கால் முட்டியினால் வேகமாக தவிழ்ந்து செல்கிறான்.
இந்த வீடியோவை சுதா ராமன் என்று வனத்துறை அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “இதை பற்றி கூற வார்த்தைகள் இல்லை. இதை பார்த்தாலே புரியும் கிரிக்கெட் மீதான சிறுவனின் காதல். இது முகப்புத்தகத்தில் கிடைத்தது, அந்த சிறுவனை பற்றி அறிய ஆசைப்படுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டேக் செய்துள்ளார். 1000-க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்ட அந்த வீடியோ பலரும் பாராட்டி உள்ளனர்.
அதிலும், குறிப்பாக நபர் ஒருவர், அந்த சிறுவனுடன் விளையாடும் மற்ற சிறுவர்கள் குறித்து, குறிப்பிட்ட சிறுவனை சமமாக நடத்துவதாக பாராட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற நல்ல வீடியோவை பதிவிட்டமைக்கு நன்றி என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.
Leave a Reply