
தீக்காயங்களுக்குள்ளான முதியவர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த 85 வயதான சின்னத்துரை கார்த்திகேசு என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ம் திகதி குப்பைக்கு தீ மூட்ட முற்பட்ட போது மண்ணெண்னை விளக்கு தவறுண்டு நெஞ்சில் வீழ்ந்ததினால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிற்சை பலனின்றி குறித்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவரின் இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply