சீருடை வவுச்சர்கள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள புதிய தகவல்

2020 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது அனைத்து மாணவர்களுக்கும் சீருடைத் துணி மற்றும் சப்பாத்து என்பவற்றுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் வவுச்சர்களை வழங்கி முடிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *