தமிழர்களின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க கல்விநிலைகளை அதிகரிக்க வேண்டும்- துரைநாயகம்

தமிழர்களின் எல்லைப்பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் அப்பகுதிகளில் கல்வி நிலைகள் அதிகரிக்கப்படவேண்டும் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை சுவிஸ் உதயம் முன்னெடுத்து வருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தை பகுதியிலுள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் குமாரவேல் பாலாவின் நிதியுதவியுடன் இந்த கற்றல் உபரகணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் குமாரவேல் பாலா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சின்னத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கல்வி பயிலும் 130 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதற்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்குமான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக இதன்போது உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.

தமிழ் மக்களின் எல்லைப்பகுதிகளில் மாணவர்கள் அதிகளவில் இடைவிலகுவதால் தமிழ் சமூகத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகும் நிலையில் அந்த நிலையினை மாற்றவேண்டிய பொறுப்பு புலம் பெயர் தமிழர்களுக்கு உள்ளதாகவும் அதன் காரணமாகவே இவ்வாறான பகுதிகளின் மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதாகவும் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம் தெரிவித்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *