
பிறந்த பச்சிளம் குழந்தையை வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசியதாக கூறப்படும் 36 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கைது செய்த ஹம்பேகமுவ பொலிஸார், காட்டில் வீசப்பட்ட குழந்தையையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஹம்பேகமுவ – ரத்தஹோலாகம பிரதேசத்தில் காட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் காட்டில் வீசப்பட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
குழந்தையை நேற்றிரவு 9.30 அளவில் காட்டில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 5.30 வரை பச்சிளம் குழந்தை குளிரில் நடுங்கியவாறு பசியில் அழுது கொண்டிருந்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குழந்தையும் தாயும் முதலில் ஹம்பேகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குழந்தையை தாய் காட்டில் வீசியமைக்காக காரணம் என்ன என்பதை கண்டறிய ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ராஜபக்சவின் நெறிப்படுத்தலின் கீழ் பெண் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply