
எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு மேலும் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a Reply