
கனடா தொலைக்காட்சி ஒன்று பிரபல திரைப்படம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இடம்பெறும் காட்சியை வெட்டி விட்டு அந்த படத்தை ஒளிபரப்பியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹோம் அலோன் என்ற திரைப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதி இடம்பெறும் காட்சி ஒன்று அமைந்திருந்தது. அப்போது அவர் ஜனாதிபதியாகவில்லை.
அத்துடன் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஹொட்டலும் அப்போது ட்ரம்புக்கு சொந்தமாக இருந்தது.
அதில் ட்ரம்பாகவே தோன்றும் அவரிடம், திரைப்படத்தின் கதாநாயகனான குட்டிப்பையன், லாபி எங்கிருக்கிறது என்று கேட்க, ட்ரம்ப் அவனுக்கு வழி சொல்லுவார்.
தற்போது கிறிஸ்துமஸ் நேரத்தில் கனடா தொலைக்காட்சி ஒன்றில் அந்த திரைப்படம் ஒளிபரப்பட்ட நிலையில், அதில் ட்ரம்ப் இடம்பெறும் காட்சி வெட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் ட்ரம்பின் மகன் உட்பட, அவரது ஆதரவாளர்கள் பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இருமுகம் கொண்ட கனடா பிரதமர் ட்ரூடோதான் ட்ரம்ப் இடம்பெறும் காட்சியை வெட்டச் சொல்லியிருப்பார் என பலரும் ட்விட்டரில் கொதித்துவிட்டார்கள்.

ட்ரம்பின் மகனான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹோம் அலோன் 2 படத்தில் ட்ரம்பைக் காணவில்லை, மிகவும் பரிதாபம் என்று ட்வீட்டியதோடு, கடுமையாக அந்த தொலைக்கட்சியை விமர்சித்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்த தொலைக்காட்சி நிறுவனம், தாங்கள் 2014இலேயே, ட்ரம்ப் ஜனாதிபதியாவதற்கு முன்பே அந்த காட்சியை வெட்டிவிட்டதாகவும், விளம்பரம் வெளியிடும் நேரம் கருதியே அதை வெட்டியதாகவும் அதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

Leave a Reply