
நடிகர் பிரபாஸ் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பலரால் அறியப்பட்டவர்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு பின்னர் பிரபாஸின் திருமணம் நடைபெறும் என பல வதந்திகள் வெளியாகியிருந்தன.
இவையொருப்புறம் இருக்க பிரபாஸ் – அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்து குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘பிரபாஸுக்கு பொருத்தமான பெண்ணை தேடி வருகிறோம் என்றும் தங்களுடைய குடும்பம் மிகப்பெரியது என்பதால் தங்கள் குடும்பத்துடன் இணையும் மனநிலையில் உள்ள பொருத்தமான பெண்ணை தேடி வருவதாகவும் விரைவில் அவருக்கு பொருத்தமான பெண்ணை கண்டுபிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
Leave a Reply