
2019ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் கணித பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.
அதற்கமைய அக் கல்லூரியின் மாணவன் தருஷ ஷெஹான் பொன்சேகா நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல வணிக பிரிவில் (பழைய பாடத்திட்டம்) பத்தேகம கிறிஸ்துதேவ கல்லூரியைச் சேர்ந்த நிரோஷன் சந்தருவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நாடளாவிய ரீதியல் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அதற்கமைய பொறியியல் தொழில்நுட்பத்தில் (புதிய பாடத்திட்டம்) குறித்த கல்லூரியின் வினுர ஒசத கால்லகே முதலிடம் பெற்றுள்ளார்.
அதேபோல, கலைப் பிரிவில் (பழைய பாடத்திட்டம்) ஸ்ரீநிபுண விராஜ் ஹெட்டியாராய்ச்சி முதலிடத்தை பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பார்வையிட முடியும்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும்.
கடந்த ஓகஸ்ற் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் இம்முறை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply