
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய மேலதிக அரசாங்க செலவுகள் முழுமையாக குறைவடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதத்தில் அரசாங்கத்திற்கு 2000 கோடி ரூபா செலவை கட்டுப்படுத்த முடிந்ததாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி பாதுகாப்பு சேவை, போக்குவரத்து பிரிவு, ஊழியர் சபை மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குறைப்பு போன்றே அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ பதவிகள் குறைப்புகள் மேற்கொண்டமையினால் இவ்வாறு பணத்தை சேமிக்க முடிந்துள்ளது.
அதேபோன்று எந்தவொரு வாகனமும் புதிதாக கொள்வனவு செய்யப்படவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க அளவு பணத்தை சேமிக்க முடிந்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் மேலதிக அரச செலவுகளை முழுமையாக குறைப்பதன் மூலம் வருடாந்தம் அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபா பணத்தை சேமிக்க முடியும் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply