
ஒரு கட்சியின் கீழ் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன்று பல கட்சிகள் உருவாகியுள்ளமை தமிழ் மக்களின் ஒற்றுமையை திட்டமிட்டு குழப்புவதற்கான செயலென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் சனிக்கிழமை இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆரம்ப கால கட்டத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரு கட்சியின் கீழ் வாழந்தார்கள்.
இன்று எம்மத்தியில் பல கட்சிகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளன. இது தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சில தரப்பினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகவே உள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தி பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே இதனை அனைவரும் பார்க்க வேண்டும்
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாது ஆட்சியமைப்பதற்காக வாக்களியுங்கள் என சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு ஆணை கொடுக்கும் வகையில் சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானரார்.
இந்தநிலை தமிழ் மக்கள் மத்தியில் இல்லாது இருக்கும் வகையிலேயே புதிய புதிய கட்சிகள் தோற்றம் பெற்றள்ளன. மக்களை பிரிவினைக்குள் உள்ளாக்கி பலவீனப்படுத்தப்பட்ட இனமாக்க, இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று இனப்பிரச்சினைக்கு அப்பால் அபிவிருத்தி என கூறிக்கொண்டு சிலர் வருகின்றனர்.
நாமும் அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தோம். கடந்த 3 ஆண்டுகளில் பல அபிவிருத்தி திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களிற்கான பணத்தினை வழங்காது தடுத்துள்ளனர். இது திட்டமிட்டு எம்மக்களை பாதிப்படைய செய்யம் செயலாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply