கல்முனை பிரதேச செயலக விவகாரம்! கருணா விடுத்துள்ள எச்சரிக்கை

கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய தான் இனி விடமாட்டேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியின் பெரியநீலாவணை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நா.மிதுலன் தலைமையில் அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொது மண்டபத்தில் நேற்று மக்களுடனான மாபெரும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதியை விரைவில் மீண்டும் சந்திப்பதுடன், புதிதாக உருவாக்கப்படவுள்ள கல்முனை மத்தி கல்வி வலயம் தொடர்பாக நாம் இந்த அரசாங்கத்தில் கேட்டு செய்து முடிப்போம்.

எமக்கு பல நல்ல விடயங்களை செய்யக்கூடிய இந்த அரசாங்கத்திடம் இருந்து எமது தேவைகள், குறைகளை நிவர்த்தி செய்ய முடிந்தவரை பாடுபடுவேன்.

அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுசு புதுசாக ஏதோ கதைத்து மக்களை குழப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய நான் இனி விடமாட்டேன். புதிய தலைமுறையை உருவாக்க அம்பாறையில் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இனியாவது எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்.

காற்று போன சைக்கிளில் சென்ற உங்களுக்கு எம்மால் ஒரு போதும் மக்களால் ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

இதில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர், கொள்கை பரப்பு செயலாளர், முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் நலன் பேணல் பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *