
கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயினை பரவுவதை தடுக்கும் வகையில், அவுஸ்ரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் வாணவேடிக்கைகளுக்கு தடையில்லை என அந்த மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி, இந்த தடை உத்தரவினை அப்பகுதி மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மானியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஏற்கனவே இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகி விட்டது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக விக்டோரியா மாகாணத்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
Leave a Reply