
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில், முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் விஜயன் கருத்து வெளியிடும்போது, “குடியுரிமை சட்டம், மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது. இது, குடியுரிமை வழங்குவதில் மத பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. அரசியலமைப்பின் அடிப்படை மதிப்பு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது.
நாட்டில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால், குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைத்து, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மையை நிலைநிறுத்த வேண்டும். பல மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இது சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பை கெடுத்துவிட்டது” எனக்கூறினார்.
சட்டசபை ஆரம்பித்ததும் பா.ஜ.க.வின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் கூறுகையில், “குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவது சட்ட விரோதம். அரசியல் விரோதம் காரணமாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
Leave a Reply