
தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்வரும் ஆண்டிலிருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் டோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கட்சியை வழிநடத்துமாறு ஜெரமி கோர்பின் தொழிற்கட்சியை வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தனது புத்தாண்டு செய்தியில், “தொடர்ச்சியாக நான்காவது தோல்வியின் பின்னர் கட்சி பெரும் கடினமான காலங்களை எதிர்கொண்டது, இருப்பினும் எமது இயக்கம் மிகவும் வலுவாக இருந்தது” என கூறியுள்ளார்.
மேலும் வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெறுவதை தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தொழிற்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல மூத்த தொழிற்கட்சி அரசியல்வாதிகள் ஜனவரி மாதம் ஆர்வத்துடன் தொடங்கவுள்ள தலைமைக்கான போட்டியில் நுழைவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
அந்தவகையில் தொழிற்கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் ஷெபீல்ட் நகர மேயர் டான் ஜார்விஸ், தொழிற்கட்சியின் சிரேஸ்ர பிரமுகர்களில் ஒருவரான சேர் கியர் ஸ்ரார்மெர், விகன் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லிசா நன்டி மற்றும் வேலை மற்றும் ஓய்வூதிய முன்னாள் அமைச்சர் யெவெற் கூப்பர், ரெபேக்கா லோங்-பெய்லி ஆகியோர் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply