
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரித்தானியா 151 மில்லியன் நிதியுதவி செய்துள்ள நிலையில், தாமே சொந்தமாக விண்வெளிக்கு விண்கலங்களை அனுப்பும் வசதியுள்ள இந்த நாடுகளுக்கு நிதி உதவி செய்வதா என பிரித்தானியாவில் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிதியுதவி செய்வதா என போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும், ஒரே ஆண்டில் இரு நாடுகளுக்கும் செய்யப்படும் நிதியுதவி 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல், பிரித்தானியர்களுக்கு இன்னும் எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதம் நிலவின் மறு பக்கத்துக்கு ரோபோ விண்கலம் ஒன்றை அனுப்பி, நிலவின் மறு பக்கத்துக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெயரை சீனா பெற்றது.

இந்தியா, சந்திராயன் 2ஐ அனுப்புவதற்காக 107.8 மில்லியன் பவுண்டுகளை செல்விட்டுள்ளது.
அப்படியிருக்கும் நிலையில், உலகில் எத்தனையோ பேர், குறிப்பாக குழந்தைகள், உணவோ, சுத்தமான நீரோ அல்லது மருந்துகளோ இல்லாமல் வறுமையால் மரணமடைந்துகொண்டிருக்க, அவர்களுக்கு உதவாமல் இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு உதவுவதா என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Leave a Reply