தந்தையால் தாயாகிய 13 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

வயிறு வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்ற ஒரு 13 வயது சிறுமி, ஆண் குழந்தை ஒன்றைப் பெற்று உயிரிழந்த நிலையில், அவளது கர்ப்பத்துக்கு காரணம் அவளது சொந்த தந்தைதான் என்று தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரேஸிலில் Luana Ketlen (13) என்ற சிறுமி கடுமையாக வயிறு வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்றுள்ளாள்.

அவளை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடலில் போதுமான இரத்தம் இல்லாமல் அவதியுற்ற Luana, இனியும் குழந்தையை சுமப்பது ஆபத்து என்பதால் Luanaவை பிரசவிக்க செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள் Luana. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

ஆனால், அதற்குப் பின் Luanaவுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அவளது கல்லீரல், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டதோடு அவளுடைய இரத்த அழுத்தமும் கடுமையாக குறைந்தது.

ஆகவே உள்ளூர் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், தலைநகரிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டாள் அவள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே அவளது உயிர் பிரிந்தது.

இதற்கிடையில், Luanaவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று விசாரித்தபோது, அவளது சொந்த தந்தையான Tome Faba (36)தான் குற்றவாளி என்பது தெரியவந்தது.

தன் தந்தையுடன் மீன் பிடிக்கச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட Luanaவை, மீன் பிடிக்கச் செல்லும்போது Tome தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வன்புணர்ந்து வந்தது தெரியவந்தது.

இதற்கிடையில், மகளுக்கு குழந்தை பிறந்த விடயம் தெரிந்ததும் Tome தலைமறைவானார். ஒரு வாரத்திற்குப்பின் அவரைக் கைது செய்த பொலிசார், சிறார் துஷ்பிரயோகம் மற்றும் கொலைக்குற்றச்சாட்டுகளை Tome மீது சுமத்தியுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *