
ஆட்சி மாறும் போது அலரி மாளிகையில் கைவிடப்பட்ட ஆவண கோப்புகள் சில, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அந்த ஆவணங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிராகரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்களின் பிரதிகள் உட்பட கடிதங்களே இருந்ததாக தெரிய வருகிறது.
கடந்த அரசாங்கத்தில் செயற்பட்ட பிரதான அமைச்சர்கள் நால்வரின் நிராகரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் அதில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் மூவர் தற்போது சஜித் தரப்பினரை பிரதிநிதித்துப்படுத்துவதாகவும், அவர்களில் ஒருவர் ரணில் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply