
நிலவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கும் சாதகமான விடிவு கிடைக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த வருடம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு முன்னேற்றகரமான நிலையை எட்ட முடியாத ஒரு ஆண்டாக 2019 ஆம் ஆண்டு கழிந்து செல்கின்றது.
எவ்வாறாயினும் இரண்டு தேர்தல்களை சந்திக்க வேண்டிய ஆண்டாக 2020ஆம் ஆண்டு காணப்படுகின்றது.
அவ் இரண்டு தேர்தல்களிலும் தமிழ் தேசியத்தின் வலிமை வெளிப்படுத்தியவேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறான ஒரு வலிமையுடான பலத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்னை தொடர்பில் பேசக் கூடிய சூழ்நிலை உருவாகவேண்டும்.
அவ்வாறு பேசக்கூடிய சூழ்நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கை அரசாங்கத்துடனும் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒரு முன்னேற்றகரமான நிலையை தமிழ் மக்கள் எட்டக் கூடிய ஆண்டாக 2020 ஆம் ஆண்டு மலரவேண்டும்.
எங்களுடைய அனைத்து மக்களுக்கும் சுபீட்சமான மகிழ்சியான ஒரு ஆண்டாக 2020 ஆம் ஆண்டு அமையவேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வாழ்த்த விரும்புகின்றேன்.
அத்துடன் எங்களுடைய நிலவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கும் சாதகமான விடிவு கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Leave a Reply